திங்கள், 30 டிசம்பர், 2019

இறங்குமிடத்தை நீயும் 
எதிர்பார்க்கும் மனத்தின் வேகம் 
இரயிலின் ஓட்ட வேகத்தை விஞ்சும்! 
பறந்து வரும் என்றன் 
பரவச ஏக்கம் 
பாவையே உன்னைப் 
பார்க்கும் தாகம்! 
வேகமும் தாகமும் 
மோகத்தை விஞ்சுமா? 
சோகத்தை உன்னிடம் 
சொல்லிப் போகவே 
என் வரி(லி)கள் அஞ்சுமா? 




"கவியன்பன்" கலாம்


0 கருத்துகள் :

கருத்துரையிடுக