அறிவுக்கும் ஆசைக்கும் போட்டியென்றால் ஆங்கே
நெறியான வாழ்வை நினை.
பகுத்தாயும் கல்வி பலன்தரும் என்றும்
தொகுத்தாயும் பண்பைத் தொடர்.
தாயிடம் பெற்றதுத் தான்முதற் கல்வியாம்ஆயுதம் போலாம் அறிவு.
இருளாம் சினத்தையும் இல்லாமல் செய்யும்
அருளாம் அறிவை அடை.
இயற்கை உணர்வால் இறையவன் தந்த
இயற்கை அறிவாய் இயம்பு.
ஆறறிவுக் கிட்டியும் ஐயறிவாய் வாழும்நீ
வேறறிவு பேணா விலங்கு.
0 கருத்துகள் :
கருத்துரையிடுக