இக்கரைக்கு அக்கரைப் பச்சை
...என்றும் அலைபாயுமே மனோயிச்சை
சக்கரைக்கு எறும்பு எதிரிபோல
சந்தோஷத்துக்கு எதிரி கவலை
சுதந்திரத் தாய் நாட்டிலே
சுகம் உண்டு;
செல்வம் இல்லை
இயந்திர வாழ்வுதான் இங்கே
எல்லாம் உண்டு; நிம்மதி எங்கே?
எல்லார்க்கும் எல்லாமே கிடைத்து விட்டால்
இறைவனே இல்லை என்று
சொல்லி விடுவான் மனிதன்;
அதனால்
சொற்ப வாழ்வே இப்படித்தான்
இல்லாரும் உள்ளோரும்
இணைந்து தானே
நில்லா உலகை
நிர்மாணிக்க வேண்டிய நியதி
நேற்று என்பது நினைவு;
நாளை என்பது கனவு;
*நிகழ்காலம்* மட்டுமே உண்மை;
இதனை அடைந்தால் நன்மை
"கவியன்பன்" கலாம்
0 கருத்துகள் :
கருத்துரையிடுக