சனி, 4 ஜனவரி, 2020



கள்ளமனம் கொண்டோரின் உறவு வேண்டாம்
        கடமைகளை மறந்தோரின் நட்பு வேண்டாம்
பள்ளத்தி லிருப்போரை மறக்க வேண்டாம்
       படிப்பில்லாப் பாமரரை வெறுக்க வேண்டாம்
உள்ளத்தின் ஆழத்தில் பொய்மை வேண்டாம்
      உதட்டளவு மட்டுமிங்கு வேடம் வேண்டாம்
துள்ளுமிள மைவீணாய்க் கழிய வேண்டாம்
       தோல்விகளைக் கண்டபின்பு வருத்தம் வேண்டாம்


"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக