புதன், 4 டிசம்பர், 2019


கட்டுப்பாடு

உண்ணுவதில் வேண்டுமய்யா கட்டுப் பாடு
.........உணராதோர் உடல்நலத்தில் தட்டுப் பாடு
எண்ணுவதில் தீமைகளை வெட்டிப் போடு
.........இதயமதில் அன்பாலே கட்டிப் போடு
கண்ணெனவே செயற்களையும் நோட்டம் போடு
........கண்டிப்பாய் நடைபயிற்சி எட்டுப் போடு***
பண்ணுகின்ற காசுகளில் திட்டம் போடு
........பக்குவமாய்ச் செலவுசெய்யக்கட்டம் போடு
திண்ணமாக வாழ்நாளில் உறுதி யோடு .......... தின்பதிலே வரையறையாம் எல்லைக் கோடு மண்ணுக்குள் செல்வதற்கு நாட்களையும் தள்ளிப் போடும் .........மருத்துவர்கள் சொல்வதையும் காதில் போடு கண்டகண்ட தின்பண்டம் தூரப் போடு ..........கால்வயிறு போதுமென்ற உணர்வு தேடு உண்டவுடன் உறங்குவதே உடலின் கேடு ...........உண்மையிவை உடல்பருமன் குறைய நாடு ஆக்கம்: “கவியன்பன்” கலாம் -

- ***எட்டுப் போடு= ஓர் எட்டுப் போடு என்னும் சொல்வழக்கின்படி நடந்து போகுதல் என்றும் கொள்க.
அல்லது
சித்தர்களின் யோகாவில் எட்டு இலக்கம் என்று ஒரு நடைபயிற்சி உண்டு; அதன்படி எட்டு (8) வடிவத்தில் தெற்கு வடக்காகத் துவங்கிச் சுற்றி வருதல் ஓர் அரிய வகை நடைபயிற்சி.

0 கருத்துகள் :

கருத்துரையிடுக