ஆழ முள்ளுதல் உன்னிலை சொல்வதால்
ஆடு முன்மனம் அங்ஙனம் என்பதாம்
வாழ்வு முன்னிலை பெற்றிட வேண்டுதல்
மாசி லாதவுன் எண்ணமாய் உள்ளுதற்
தாழ்வு நீங்கிடப் போவது திண்ணமாம்
சாவின் முன்னரே உண்மையைக் காணலாம்
பாழும் எண்ணமே சேர்த்திடும் பாவமும்
பாழ டைந்ததாய்க் கேடுகள் சூழுமே!
எண்ணம் சொல்வதை நாளுமுன் ஏட்டினில்
எழுதி வந்ததைச் சூளுரைச் செய்வதால்
வண்ண மாயுள நற்கனா ஒன்றுசேர்
வாய்ப்பு வாயிலில் வந்துதான் நிற்பதைத்
திண்ண மாகநீ கிட்டுதற் காணலாம்
செப்பும் மந்திரம் இஃதென மாறுதல்
பண்ணி சைப்பது காசுகள் இன்னிசை
பணமும் கொட்டுதல் மாமழை போலவே!
உள்ளு மெண்ணெமும் நல்லதாய்க் கொண்டதால்
உயரும் வாழ்விலும் உன்னுய ரத்தைதான்
தெள்ளு நற்றமிழ் போலவுன் நற்புகழ்த்
திக்கெ லாம்நிறை கண்டுநீ கொள்வதால்
வள்ளு வப்பெரு மான்குறள் வாழ்வதால்
வாழ்த்து கின்றவர் அன்பினால் சீர்பெற
உள்ளு மெண்ணமும் நல்லதாய்க் கொள்ளுக
உறுதி செய்திடு மாண்புடன் இன்றுநீ!
உந்தும் எண்ணமே உன்னருஞ் செய்கைகள்
உயரச் செய்வதை உள்ளுணர் கொண்டுநீ
சிந்தும் உன்செயல் சீர்பெற நன்மைகள்
செய்து நாளுமுன் வாழ்வெலாம் மாறுதல்
முந்தும் உன்னிலை உன்னுளம் எண்ணுதல்
முழுதும் உன்செயல் என்பதாய்த் தானது
வந்து நிற்பதைக் காண்பதும் விந்தையே!
- அதிரை_கவியன்பன் கலாம்
ஆடு முன்மனம் அங்ஙனம் என்பதாம்
வாழ்வு முன்னிலை பெற்றிட வேண்டுதல்
மாசி லாதவுன் எண்ணமாய் உள்ளுதற்
தாழ்வு நீங்கிடப் போவது திண்ணமாம்
சாவின் முன்னரே உண்மையைக் காணலாம்
பாழும் எண்ணமே சேர்த்திடும் பாவமும்
பாழ டைந்ததாய்க் கேடுகள் சூழுமே!
எண்ணம் சொல்வதை நாளுமுன் ஏட்டினில்
எழுதி வந்ததைச் சூளுரைச் செய்வதால்
வண்ண மாயுள நற்கனா ஒன்றுசேர்
வாய்ப்பு வாயிலில் வந்துதான் நிற்பதைத்
திண்ண மாகநீ கிட்டுதற் காணலாம்
செப்பும் மந்திரம் இஃதென மாறுதல்
பண்ணி சைப்பது காசுகள் இன்னிசை
பணமும் கொட்டுதல் மாமழை போலவே!
உள்ளு மெண்ணெமும் நல்லதாய்க் கொண்டதால்
உயரும் வாழ்விலும் உன்னுய ரத்தைதான்
தெள்ளு நற்றமிழ் போலவுன் நற்புகழ்த்
திக்கெ லாம்நிறை கண்டுநீ கொள்வதால்
வள்ளு வப்பெரு மான்குறள் வாழ்வதால்
வாழ்த்து கின்றவர் அன்பினால் சீர்பெற
உள்ளு மெண்ணமும் நல்லதாய்க் கொள்ளுக
உறுதி செய்திடு மாண்புடன் இன்றுநீ!
உந்தும் எண்ணமே உன்னருஞ் செய்கைகள்
உயரச் செய்வதை உள்ளுணர் கொண்டுநீ
சிந்தும் உன்செயல் சீர்பெற நன்மைகள்
செய்து நாளுமுன் வாழ்வெலாம் மாறுதல்
முந்தும் உன்னிலை உன்னுளம் எண்ணுதல்
முழுதும் உன்செயல் என்பதாய்த் தானது
வந்து நிற்பதைக் காண்பதும் விந்தையே!
- அதிரை_கவியன்பன் கலாம்
0 கருத்துகள் :
கருத்துரையிடுக