வெள்ளி, 6 டிசம்பர், 2019




நடுத்தெருவின்
 நடுத்தெருவில்
நற்றளிர் நடை
நடுங்கும் கையில் குடை

பிஞ்சுக் கையில்
மஞ்சள் பையில்
புத்தகம் யாவும்
மொத்தமாய் நனைய
குடையின் பிடிதளர
நடை வேகமாய்
உடை நனைந்த
மழைக்காலம்
மனத்தினில்
கனாக்காலம்

விடாமுயற்சியின் விடியல்
விடாமழையிலும் குடையில்!

தடையிலாப் பயணம்
 நடையிலே கவனம்!
படிப்பில் தீவிரம்
 துடிப்பில் தெரியும்!

பாடம் படிக்கும்
இச்சிறுமி
 பாடம் கற்பிக்கும்
ஆசிரியையாய்

மழையென்று சொல்லி
மடிதல்;
பிழையென்று சொல்லிப்
படிப்பிக்கும்”

வாழ்த்துகிறேன் உன்னையும்
வளர்த்தெடுத்த பெற்றோரையும்
கற்பித்த ஆசிரியையும்

சோம்பல் என்னும்
சாம்பல் போக்கித்
திறமைத் தீயைத்
திறம்படத் தூண்டும்
வேகம் உன்றன் நடையில்!

இப்படித்தான்


இடியாய்ச் சத்தமும் வாழ்விலே
இன்னலாய் வந்திடும் போதில்
நூடியாய்த் தோல்வியில் துவண்டிடத்
தோன்றிடும் வேளையில் நீயும்
பிடியாய்க் கொள்வது துணிவுடன்
பிடித்தவுன் குடையுடன் கூடி
மடியா நோக்கிலே படிப்பினை
மட்டுமே நினைத்தலைப் போலே!


 "கவியன்பன்"கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக