விதையின் எழுச்சியும் வெற்றிப் புரட்சி
நிதமும் எழுகின்ற ஞாயிறும் கூறும்
நிதமும் உழைத்தால் நிலத்தில் புரட்சி
விதைபோல் எழுவாய் விரைந்து
காற்றின் புரட்சி கடும்புயல் சொல்லுமே
மாற்றும் அரசினை மக்கள் புரட்சியால்
ஆற்றல் முகில்தரும் ஆற்றல் புரட்சியே
போற்றும் மழையாய்ப் பொழிந்து
கல்விப் புரட்சியும் காமராசர்ச் சிந்தையாம்
சொல்லில் புரட்சியைச் சொன்னவர் அண்ணாவாம்
எல்லாம் இலவயம் என்றானச் சோம்பலால்
இல்லை புரட்சியும் இன்று
குழப்பம் விளைவித்தல் கோழைப் புரட்சி
ஒழுக்கம் வளர்த்தல் உயந்தப் புரட்சி
அழுக்காறு நீக்கல் அகத்தின் புரட்சி
விழுப்பம் பெறவே விருப்பு
“கவியன்பன்” கலாம்
0 கருத்துகள் :
கருத்துரையிடுக