புதன், 4 டிசம்பர், 2019

தேனென் றாலும் இனிக்காது
     தெவிட்டாத் தமிழைச் சொன்னாலும்
ஊனி லெங்கும் கலப்பதனால்
       ஊறும் தேனாம் குருதியெலாம்
வானின் மழைபோல் குளிர்ச்சிகொண்டு
        வாழ்த்தும் குளுமைத் தமிழென்று
நானும் சொல்ல கேளுங்கள்
        நாளும் போற்றும் தமிழினிதே!

0 கருத்துகள் :

கருத்துரையிடுக