எழுதுகோல்
சமூக விழிப்புணர்வின்
ஒரு நெம்புகோல்
எழுதுகோல்
கவியாட்சியின்
செங்கோல்!
ஒற்றை நாவாய் வந்து
உலகத்தைப் பாடும்
நற்றமிழ் ஆக்கம்
பழுதுபட்டுப்
பாழடைந்த உள்ளங்கள்
எழுதுகோலின்
மொழி விளக்கொளியால்
விழிக்கட்டும்!
கைவிரல்கள்
கணியியில் தட்டச்ச
திரைகளில் பூக்கும்
தித்திக்கும் தமிழ்மலர்கள்!
பேனாவின் முள்ளில்
தானாய் வந்து விழும்
மலர்களைக் கோத்து
மணம் வீச வைப்பீர்!
உதிரும் உறவுகளில்
உதிராத ஓர் உன்னத
வாடா மலராக
வார்த்தைகள் மலரும்!
பேனா மை
உண்மை என்னும் “மை”
ஊற்றப்பட்டுத்
திண்மையைப்
பேசிடும் தன்மை!
மதத்தைக் கீறாத
பதமான மனிதநேய
இதமானவைகளாய்
இருக்கட்டும்!
பேனாவால் எழுதிபவைகளைக்
கண் வைத்துக் காணுவதற்குக்
கணினிக்கும் மகிழ்ச்சிதான்
அன்று அந்தக் காகிதம் பெற்றது போல்!
*கவியன்பன் கலாம்*
0 கருத்துகள் :
கருத்துரையிடுக