-ஏற்றம் வேண்டின் ஏகுக பயணம்
மாற்றம் வேண்டின் மாற்றுக துயரம்
காட்டிடும் வழிகள் கண்டு சோம்பல்
பூட்டினை உடைத்துநீ புறப்படு இளைஞனே
திரைகடல் கடந்து தேடும் செல்வமும்
விரைவுடன் வளர்ந்து வீடு சேர்ந்திடும்
தடைகள் எல்லாம் தாண்டிநீ உழைத்திடு
விடைகள் கிட்டிடும்; விடியல் எட்டிடும்
உலகமும் சுருங்கி உன்னைத் தேடியே
பலவகை வழிகள் பார்ப்பாய் அண்மையில்
தொடர்ந்து வாய்ப்புகள் தொடரும் வாயிலில்
படர்ந்து நோக்கியே பயணம் செல்கவே!
“கவியன்பன்” கலாம்
0 கருத்துகள் :
கருத்துரையிடுக