ஞாயிறு, 29 டிசம்பர், 2019


என்னை விளித்தவன் ஏது சிறப்பென்று
மன்னன் வினவ மறுமொழி கூறினேன்
மின்னி வருவது மின்னலை விஞ்சிடும்
சின்னக் குழந்தைச் சிரிப்பு.

தொட்டியில் தோரணம் தொங்குதல் கண்டதும்
மட்டிலாப் புன்னகை மாண்புடன்  சுட்டியே
கன்னம் குழையக் கருவிழி பார்த்திருக்கும்
சின்னக் குழந்தைச் சிரிப்பு.


"கவியன்பன்"கலாம்

--




0 கருத்துகள் :

கருத்துரையிடுக