”மிருகமும் மனிதனா, கலாம்?” என்று என் கவியுள்ளம் கேட்டது
“மிருகமும் மனிதராகலாம்” என்று எனக்குள் பட்டது
அதனாற்றான்,
யானையின் பலம்;
சிங்கத்தின் கம்பீரம்;
புலியின் வீரம்;
நரியின் தந்திரம்;
மானின் மானம்;
குயிலின் கானம்;
குரங்கின் மனம்;
காக்கையின் ஒற்றுமை;
நாயின் நன்றியுடைம;
கிளியின் பாசம்;
ஆறறிவுள்ளவனுக்கு
ஐயறிவுகளிடமிருந்தே உவமை?!!
காட்டிலும் வீட்டிலும்
வாழும் இவைகள் அல்ல;
நாட்டிலும் மேட்டிலும்
குழப்பம் செய்பவர்களே
மிருகங்கள்....!!!!!!!!!!!!
“கவியன்பன்” கலாம்
0 கருத்துகள் :
கருத்துரையிடுக