சனி, 14 டிசம்பர், 2019









கண்ணைப் பற்றியே கவிதையை எழுத 
கண்ணை மூடிநான் கணநேரம் அயர 
விண்ணத் தாண்டி வந்தாய்; உன்றன் 
கண்ணைப் பார்த்ததில் கவிதைத் தோற்றதே! 
கண்ணைக் காணவே கவிதை ஊற 
மண்ணைக் காணுமுன் முழுநிலா வடிவம் 
கண்ணை விட்டும் காணோம்; என்றன் 
கண்ணை ஈர்த்தது கவிதைக் கண்ணே! 
கருவிழிப் படலம் கண்ணின் வேலாய் 
ஒருவழிச் செயலால் உள்ளம் தீண்ட 
மைவிழி யாலே மெய்கவி இயற்றும் 
மைவிழி யாளவள் மைவிழி எழிலே 
-- 


”கவியன்பன்” கலாம் 

0 கருத்துகள் :

கருத்துரையிடுக