நித்தம் உழைப்பினிற் சிந்தி வழிந்திடும் நெற்றிவியர்வை -பெரும்
முத்துக் களாய்நிலம் நோக்கி விரைவுடன் முத்தமிட - இவன்
மிக்கப் பெருகும் மகிழ்ச்சிக் கடலில் மிதப்பதனை - அதைப்
பக்க பலமாய் நினைத்தே மனைவி பரிசளிக்க- ஒரு
தக்க தருணம் கிடைத்த கதியினில் ஆடுவதை-கனல்
கக்கும் உணர்வின் விழியால் உணர்வை எரிப்பதனை-அவள்
பக்கலில் வந்திவன் பார்த்திடும் பார்வை பயத்தினிலே- ஒரு
வைக்கலைப் போலே மடமட வென்றே எரிப்பதனை- இக்
குவலய மெங்கும் பெயரை வழங்கக் கொடுத்திடுவான்- என்றும்
இவனின் மனைவியும் தாய்மைப் பெயரை அடைந்திடுவாள்- அவள்
மக்களைப் பெற்றால் உலகம் இவனை மதித்திடுமே - இவன்
அக்கணம் கொள்ளும் அளவிலா அன்பால் குதித்திடுவான் -மீண்டும்
புறப்பட வேண்டும் இவனும் உழைப்பால் உயர்ந்திடவே- இவனே
சிறந்த கணவன் எனும்பெயர் சொல்ல உழைப்பினிலே- சும்மா
தடைகள் பிதற்றித் தருணம் விடுத்த கணவனையும்- நம்மைப்
படைக்கும் இறையும் பகைக்கும் நிலைமை வளர்ந்திடுமே- ஒர
மூலை முடங்கிக் கிடந்திடும் மூர்க்கன் முடிந்திடுவான் -வரு
நாளை நினைத்து நடுங்கி ஒடுங்கிக் கிடந்திடுவான் - இதைக
கணவனாய் உள்ளோர் உணர்ந்து நடந்தால் களிப்படைவீர்
உணவும் உறவும் உழைப்பால் கிடைக்கும் வெளிப்படையே
.
"கவியன்பன்'கலாம்
0 கருத்துகள் :
கருத்துரையிடுக