எதுவரை இயலுமோ எழுதிடு கவிதையை
அதுவரை புகழினை அடைந்திடு புவியினில்
எதுவரை முயற்சிகள் இயலுமோ முயன்றிடு
அதுவரை இலக்கினை அடைவது திறமையில்
எதுவரை விடியலும் எழுந்திடும் தருணமோ
அதுவரை உலகமும் அயர்விலாப் பயணமே
எதுவரை சுமைகளின் இடுக்கணைச் சுவைப்பதோ
அதுவரைபொறுமையாய் அமைந்திடு மனத்தினில்
எதுவரை வளைத்துனை எதிரிகள் தடுப்பரோ
அதுவரை சுழற்றிடு அழகிய முறையினில்
எதுவரை உவப்பினை இதமுடன் கொடுத்திட
அதுவரை உறவினால் அகமெலாம் மலர்ந்திடும்
எதுவரை பிறரையும் இழிவுடன் நினைத்திட
அதுவரை உனையுமே அனைவரும் நினைப்பரே
எதுவரை மரணமும் இறைவனால் விதித்ததோ
அதுவரை இருப்பது அழகிய வழியதே!
“கவியன்பன்” கலாம்
.
__
0 கருத்துகள் :
கருத்துரையிடுக