வியாழன், 5 டிசம்பர், 2019


புண்ணைத் தேடிப் புறப்படும் ஈயாய்த் (தீயப்)
பெண்ணைத் தேடிப் பெருவினை நோயாய்க்
கண்ணைக் கொன்றக் கருமையாய் வாழ்க்கை
மண்ணி லுள்ளோர் மதித்திடாப் போக்காய்

அற்ப இன்பம் அடைந்திடும் மோகம்
சொற்ப வாழ்வில் சுருங்கிடும் தேகம்
விற்கும் மேனி விளைத்திடும் மோசம்
கற்பைப் பேணாக் கழிசடை வாசம் 
மங்கை யான மனைவியே மாண்பாம்
நங்கை இன்பம் நலவுடன் காண்பாய்
எங்கோ சென்று இழப்பது ஏனோ?
பங்கம் கிட்டும் பழக்கமும் வீணே!
தாயும் ஈன்றாள் தரணியில் மேவ
நோயும் கொண்டால் நொடியினில் சாவு 
வாயில் புண்ணை வளர்க்குமாட் கொல்லி
பாயில் தூங்கிப் புலம்புவாய்ச் சொல்லி

நாணம் கொண்டு நல்முடன் ஈமான்
பேணச் செய்தால் பெருகிடும் சீமான்
காணும் செல்வம் கணக்கிலா ஏட்டில்
வேணும் அச்சம் விரைவுடன் நாட்டில்!


"கவியன்பன்” கலாம்

-- 



-
.

__,_._,___

0 கருத்துகள் :

கருத்துரையிடுக