திங்கள், 9 டிசம்பர், 2019



எங்களைப் படைத்தவன் நாட்டம் - ஓர்
      இணையிலா நன்றியின் தேட்டம்;
இங்கொரு நன்மையும் எட்டும் -வரும்
      எழில்மிகு மறுமையும் கிட்டும்!                         

வாய்ப்புகள்  வழங்கியோன் இறைவன் -இந்த
      வாயால் மறுத்தலும் முறையோ?,
தேய்ந்திடும் பூமியில் வாழ்வு- நீயும்
        தொழுதலும் நன்றியின் பதிவு


அமுதினை  வழங்கிடும் இறையை-  அவனும்
     அருளியத் தேன்மொழி மறையை
நமதெனப் போற்றிடும் மனமும்- இனி
     நன்றியைக் நவின்றிடு தினமும்


காலமும் கரைவதைக் காண்பாய்-நம்
     காசுகள் குறைவதைக் காண்பாய்,
ஞாலமும் வேண்டுதல் நன்றி - இறை
     ஞானிகள் வேண்டிய வழியில்!                         

அற்புதப் படைப்பெனும் உடலாம்- அதனுள்
   அளவிலா என்புகள் உண்டாம்
கற்பனை செய்திட முடியா  -இறையின்
   கருணையை நன்றியால் நிரப்பு!


  உதவிகள் செய்திடும் உன்றன் – எல்லா
    உறவுகள் நட்புகளை இன்றே
கதவினத் தட்டியே நன்றி- கூற
   கலக்கமும் தயக்கமும் இன்றி!
 

விடைபெறும் நாளினை எண்ணி- நீயும்
     விதைத்திடு நன்றியெனும் செடியை
தடையிலா நன்மைகள் கொட்டும்- உன்றன்
     தாளினைத் திறந்திடத் தட்டும்!




"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக