மடித்து வைப்பதலோ
மடியின் மீது வைப்பதாலோ
”மடிக்கணினி” என்றானேன்
குடிசைக்குள்ளும்
குடிபுகுந்தேன்
படிக்கும் மாணாக்கர்
பள்ளி”நோட்புக்” ஆனதால்
விலையில்லாப் பண்டமான
நிலையில் என்னை
அறிமுகம் ஆனதால்
பறிபோனது முந்தைய ஆட்சி!
இனிவரும் காலங்களில்
இன்னமும் “இலவசம்”;
கனியாய் வெற்றியைக்
கணிப்பவன் மடிக்கணினி
முன்னே பிறந்த
என்னுடைய அண்ணன்
கைப்பேசி உலகைக்
கைக்குள் அடக்கினான்
கைக்கெடிகாரம், கணிதப்பொறி
வணிகத்தை முடக்கினான்;நானோ
அவனையும் என்னுள் அடக்கினேன்;
அவன் வழியில் அனைத்தையும்
மடக்கினேன்;முடக்கினேன்!!!
என்னைத் திறந்தவர்
எல்லாம் மறந்திடுவர்
மூளையால் உலகின்
மூலையெலாம் பறந்திடுவர்
எண்ணிலாத் தளங்கள்
என்னிடம் உள;
விண்ணின் வழியே
விண்மீன்களாய் வலைப்பூக்கள்;
இதயதளங்களை இணைக்கும்
இணையதளங்கள்; இதனால்
வணிகவளங்கள்
அறிமுகம் ஆகியே
நட்புமுகம் கூட்டும்
முகநூல் பக்கம்;
முழுநேரம் மக்கள்
விழுகின்றனர் அதன் பக்கம்!!
தன்மக்களை
தன் தோளில் சும்ந்திடாத்
தந்தையர் பலர்
என்னை மட்டும்
தன்னோடு சுமக்கின்றனரே?!
ஆலோசனைக் கூட்டம்
ஆரம்பமே என்னை
“ஆன்” செய்வது கொண்டே
”நோட்புக்” ஆகிய நான் ஈன்ற
”மாத்திரை” குழந்தைகள் (டேப்லெட்ஸ்)
சிலேட்டுகளாய் வலம்
நோட்புக் என்றால் நான் தான்;
சிலேட் என்றால் டேப்லெட்
கல்லுக்குச்சி என்றால் பென்ஸ்டிக்
ஒன்னாங்கிளாஸ் பிள்ளைகளாய்
ஒழுங்காய்ப் போய்க் கடைகளில்
நோட்புக், சிலேட்,கல்லுக்குச்சி
வாங்கினாத்தான் வளம்பெறலாம்
“கவியன்பன்” கலாம்
--
0 கருத்துகள் :
கருத்துரையிடுக