வியாழன், 5 டிசம்பர், 2019

"சேமிப்பு"
=========

"கடனட்டைச் சேற்றுக் கடலிலே மூழ்கி
மடமைக்குப் பின்னால் மடிந்து விடாதிருக்கச்
சிக்கனம் தானே சிறந்த படகாகும்
இக்கணம் தீர்வாம்  இது

அறிவாற்றல் சேமிப்பால் ஆகும் பதவி
நெறிவாழ்வின் சேமிப்பே நீள்பயணத் தோழன்
வறியோர்க்குச் செல்வத்தை வாரி வழங்கு
பறிபோகாச் சேமிப்பாம் பார்

தேனாய் பிரியுமே தேனீயின் சேமிப்பு
ஊனாய் பிரியுமே ஊணுண்ட சேமிப்பு
மேகத்தின் சேமிப்பு மேவிடும் மாரியாய்
சோகத்தின் சேமிப்புச் சோர்வு.

சாதனையாய்ச் சேரும் சடையா உழைப்புமே
ஊதியமாய்ச் சேரும் உழைத்தவர் சேமிப்புப்
பேரும் புகழும் பெறுதலும் சேமிப்பு
யாரும் பிரிகிலார் ஆங்கு.


அதிரை கவியன்பன் கலாம், துபை .

-

0 கருத்துகள் :

கருத்துரையிடுக