திங்கள், 16 டிசம்பர், 2019








எல்லையிலா அருளால் காக்கும்
.....இறையவனும் வகுத்த சட்டம்
எல்லைக்கோ டென்று பார்த்து
.....இணக்கமாக வாழ்தல் திட்டம்
தொல்லைகளும் வரத்தான் செய்யும்
...தொடர்ந்துநீதான் முன்னே செல்வாய்
இல்லையென்றால் உழைப்பில் தேக்கம்
....எழும்நிலையைக் கண்டு கொள்வாய்!



அளவுக்கு மிஞ்சும் போதில்
...அமுதமுமே நஞ்சாய்ப் போகும்
பிளவுக்கு வழியைக் காட்டும்
....பிறர்மனங்கள்புண்ணாய்ப் போகும்
அளவுக்கு மேலே காட்டும்
..அக்கறையிில் கூடத் தொல்லை
களவில்லாக் கற்பைப் பேண
...காண்பதொரு பண்பின் எல்லை!


நாட்டிலுள்ள எல்லைக் கோடு
.....நல்லவர்கள் மதிக்கும் கோடு
வீட்டிலுள்ள எல்லைக் கோடு
...விரும்புவர்கள் அண்டை வீடு
பாட்டிலுள்ள யாப்பின் கோடு
....பாடல்கள் அமைப்பைக் காட்டும்
வாட்டிவிடும் வறுமைக் கோடு
...வறியவர்க்குத் தொல்லைக் கோடு



ஆட்டத்தில் எல்லைக் கோடு
.....ஆட்டத்தைச் சிறக்கச் செய்யும்
நாட்டத்தில் எல்லைக் கோடு
...நாள்வரவை எண்ணிப் பார்க்கும்
நோட்டத்தில் எல்லைக் கோடு
..நோவினையே இல்லாக் கற்பு
கூட்டத்தில் எல்லைக் கோடு
...கூச்சலிடத் தடுத்து வைக்கும்!
...




“கவியன்பன்” கலாம்,


0 கருத்துகள் :

கருத்துரையிடுக