வயசு வந்து போச்சு”
(ஒரு முதிர்கன்னியின் முனகல்)
வயசு வந்து போச்சு
மன்சு நொந்துப் போச்சு
ஆண்டுகள் பெருகிப் போச்சு
ஆயுளும் அருகிப் போச்சு
உணர்வுகள் கருகிப் போச்சு
கண்களும் அருவியாச்சு
வரன் பிச்சைக்காரர்களால்
சவரன் இச்சைக்காரர்களால்
முதிர்க்ன்னி நிலையில்
வாழ்ந்தோம்
புதிர்ப்பின்னிய வலையில்
வீழ்ந்தோம்
நரையும் வந்தாச்சு
வாழ்க்கை நாடகத்
திரையும் விழுந்தாச்சு
அலை ஓய்வது எப்போது?
நில்லை மாறுவது எப்போது?
சாதியும் சவரனும்
பிரதிவாதி ஆன போது
நீதியும் கிடைப்பது எப்போது?
நாதியற்றோரைக் காணாத போது!!
விடையறியா வினாவாக
நடைபெறாக் கனாவாக
விடியலறியா இரவாக
,மடைதிறக்கா அணையாக.
தடைபட்டே அணைகின்றது
உணர்வுகளின் வெப்பம்
உருவாக்குமோ தப்பும்?
உன்னுடைய சுகத்துக்கு
பெண்ணிடம் பிச்சைக் கேட்கும்
உன்னுடைய ஆண்மைக்கு
என்ன பெயர் உலகம் வைக்கும்?
ஏக்கப் பெருமூச்சின்
தாக்கங்களே உங்களைத்
தாக்குகின்றன
சுனாமி, பூகம்பங்களாய்
இன்னுமேன் உணரவில்லை
பினாமி பூதங்களே
முதியோர் இல்லங்கட்கு
மூடுவிழா நடாத்த
புதியதோர் உலகம் காண
புறப்பட்ட கவிஞர்காள்!
முதிர்கன்னிகளின் இல்லங்கள்
புதியதாய் முளைப்பதை
பதிவு செய்யுங்கள்
உண்ண வுணவு முடுத்த
உடையு மிருக்க வீடும்
திண்ண மாய்நீ தருக
திறமை மிக்க ஆணாய்
மண்ணில் வாழ்தல் வீணாய்
மதிப்பி ழந்து போவாய்
எண்ணி வரனைப் பேசு
என்றன் வயது போச்சு
”கவியன்பன்” கலாம்,
0 கருத்துகள் :
கருத்துரையிடுக