பிறந்தநாள்
கனவாய்க் கண்ட தாயை
நனவாய்க் காண
கர்ப்பவாய் திறந்தநாள்
அற்ப உலகினில் பிறந்தநாள்!
பூமிக் காணியில்
விதையாய்க் காலை
உதைத்த நாள்!
ஆயுள் மரத்தின்
ஆணிவேராய்
ஆவணக் கிளைகளின்
ஆதாரக் கருவாய்
ஆக்கிக் கொண்ட நாள்!
வருடம் கூடினால்
வாழும்நாள் குறையும்
உருளும் எதிர்விகிதம்
உருவாக்கியவனின் கணிதம்!
பெயரைப் போலவே
பிறந்தநாளும் மறவாது
உயிரும் போகும்வரை
உள்ளம்விட்டு மறையாத
_"கவியன்பன்"கலாம
0 கருத்துகள் :
கருத்துரையிடுக