சனி, 14 டிசம்பர், 2019




உழைப்பின் பரிசாய் உயரும் பதவி
விழுப்புண் பரிசெலாம் வீரத் தினழகாம்
நல்லறம் பேணி நலமுடன் வாழ்கின்ற
இல்லறம் தந்ததோர் ஈடில் பரிசுதான்
சொல்லைக் கடந்த சுகந்தரும் பிள்ளைகள்
கல்விப் பரிசாகக் காணும் மதிப்பெலாம்
செல்லு மிடத்தில் சிறப்பு


*"கவியன்பன்" கலாம்*

0 கருத்துகள் :

கருத்துரையிடுக