வியாழன், 5 டிசம்பர், 2019




கருவும் உருவாகிக் காண  எதிர்பார்ப்பு
கருமை முகில்கூடும் காட்சி எதிர்பார்ப்பு
பெருகும் விலைவாசிப் பேரம் எதிர்பார்ப்பு
உருகும் நிலைபோக உண்மை எதிர்பார்ப்பு


படிக்கும் பருவத்தில் பண்பின் எதிர்பார்ப்பு
அடிக்கும் தருவாயில் அன்பின் எதிர்பார்ப்பு
துடிக்கும் உடலும்தோள் தொங்க எதிர்பார்ப்பு
வடிக்கும் கவிதைக்கு வார்த்தை எதிர்பார்ப்பு


நகைக்கும் சிரிப்புக்கு நாடே எதிர்பார்ப்பு
பகைக்கும் குணத்திற்குப் பாவம் எதிர்பார்ப்பு
மிகைக்கும் கருணைக்கு மேன்மை எதிர்பார்ப்பு
புகைக்கும் பழக்கத்தால் புற்றே எதிர்பார்ப்பு



_"கவியன்பன்" கலாம


0 கருத்துகள் :

கருத்துரையிடுக