வெள்ளி, 27 டிசம்பர், 2019



சோம்ப லீன்ற தாமதச் செடியைக்
காம்பில் கிள்ளியே களைய வேண்டும்
தள்ளிப் போடும் தாமதக் குணத்தால்
தள்ளிப் போகும் சாதனை வரவுகள்
ஒருநொடி  தவறுதல் ஒழுங்கை மாற்றிடும்
வரும்வரம் எனுமுன் வாய்ப்புக ளிழந்து
நன்மைகள் பறிபோய் நட்டம்
உன்னிடம் விரைவதை உணர்க இன்றே!


"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக