ஞாயிறு, 8 டிசம்பர், 2019






அறிவுக்கும் 
ஆசைக்கும் போட்டியென்றால் ஆங்கே
நெறியான  வாழ்வை நினை
.

பகுத்தாயும் கல்வி பலன்தரும் என்றும்
தொகுத்தாயும் பண்பைத் தொடர்.

தாயிடம் பெற்றதுத்  தான்முதற் கல்வியாம்
ஆயுதம் போலாம் அறிவு.

இருளாம் சினத்தையும்  இல்லாமல் செய்யும்
அருளாம் அறிவை அடை.

இயற்கை உணர்வால் இறையவன் தந்த
இயற்கை அறிவாய் இயம்பு.

ஆறறிவுக் கிட்டியும் ஐயறிவாய் வாழும்நீ
வேறறிவு பேணா விலங்கு.

பல்வித ஆற்றல் படித்தல் அனைத்துமே
கல்விதான் என்பதைக் காண்.

எழுதல்  படித்தல்  எவரிடமி  ருப்பின் 
பழுதில்   அறிவுப்   பயன்.

ஆழ்மன நம்பிக்கை ஆன்மீக மார்க்கறிவு
வாழ்வதர்க் கான வழி

கற்றலும் கேட்டலும் கண்களாய் எண்ணியே

பெற்றவுன் பட்டறிவைப் பேண்





"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக