தேடுகிறேன் நேதாஜிக் களப்பணியை இளைஞரிடம்
நாடுகிறேன் அவரைப்போல் நடுங்காத வீரத்தை
வாடுகிறேன் மனிதர்கள் மனம்மாறும் நிலையெண்ணி
பாடுகிறேன் அவர்வீரம் படரவேண்டி நாட்டினிலே
மிதவாதம் தவிர்த்திங்கு மிரளவைக்கும் தீவிரமே
உதவாத அகிம்சையை உதறவேண்டிப் படைகொண்டார்
பதமாக விளக்குவதால் பயனில்லை என்றுணர்ந்தார்
கதறவைத்தார் அயலானின் கடுங்கோபம் தெரிந்தவரே
அடிமைகளாய்ப் பணியாமல் அலறவிட்டார் அயலானை
மிடிமைதனை விரட்டிடத்தான் வீறுகொண்டு புறப்பட்டார்
விடியலெனப் பெரும்பேறு விடுதலையும் எமைக்காண
அடித்தளமாய் இராணுவத்தை அதிரடியாய்த் துவங்கியதே
*கவியன்பன் கலாம்*
0 கருத்துகள் :
கருத்துரையிடுக