வியாழன், 9 ஜனவரி, 2020



கனாவின் பலனறியா மனமாய்; 
கருவின் உருவறியாத் தாயாய்; 
வினாவின் விடையறியா மாணவனாய்; 
விடியலின் வரவறியா இரவாய்; 

பணத்தின் மதிப்பறியாக் குழந்தையாய்; 
படிப்பின் மதிப்பறியாப்பாமரனாய்; 
உணவின் சுவையறியா உப்பில்லா 
உணவாய் அறியாமை இருளாமே 


கனாவும் பலித்ததும் புரிதலாய்; 
கருவும் பெற்றபின் தெரிதலாய்; 
வினாவின் விடையும் படிப்பிலாய்; 
விடிவெள்ளிக் கூறும் விடியலாய்; 

பணத்தின் மதிப்பறியும் பருவமாய்; 
படித்தபின் பாமரனும் மேதையாய்; 
உணவில் உப்பிட்டபின் சுவையாய்; 
உணரப்படும் அறிவும் ஒளியாமே 


இறையை அறியா உள்ளமாய்; 
இல்லாளை அறியாக் கணவனாய்; 
நிறையருள் அறியாச் சிந்தையாய்; 
நிம்மதி அறியா எண்ணமாய்; 

இறப்பினை அறியா ஆன்மாவாய்; 
இம்மை அறியா வேடிக்கையாய்; 
பிறப்பினை அறியாப் பிழைகளாய்; 
பிணைந்துள்ள அறியாமை இருளாமே 

மறையைக் கொண்டு இறையும்; 
மகிழ்ச்சி கொண்டு மனைவியையும்; 
நிறைந்துள்ளப் பேற்றினால் அருட்கொடையும்; 
நித்தமும் தியானத்தால் நிம்மதியும்; 

திறந்திடும் அகக்கண்ணால் இறப்பினையும்; 
தீமைகளின் ஏமாற்றத்தால் இம்மையும்; 
சிறந்த பிறப்பான உம்மையும் 
சிந்திக்கும் அறிவும் ஒளியாமே 


"கவியன்பன்"கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக