வியாழன், 23 ஜனவரி, 2020

நான் என்றால்
அகம்பாவதத்தின்
அடையாளம்
அகம் பாவத்தை
ஆக்ரமிப்புத் தளம்
இஃது ஆன்மீகக் கூற்று

தன்னம்பிக்கை
ஓர் ஊக்க மருந்து
உற்சாக ஊற்று
இஃது உளவியலார்க் கூற்று

உன்னால் மட்டுமே முடியும்
உள்ளத்தில் தற்பெருமை
உன்னால் முடியும்
உந்தும் தன்னம்பிக்கை

*"நான் யார்?"*

மூளையின் மூலையா
உடலிலொரு உள்ளீடா
நான் இறந்தால்
நான் என்றன் பெயரில் இல்லை
மெய்யும் பொய்யாகிப் போய்
மெய்யியல் பெயரும் பொய்யாகும்

உள்ளிருக்கும் "*நான்*"
உயிரின் ஒளியா?
எந்தையின் வித்தாக?
விந்தைகளின் கனாவாக
விடையறியா வினாவாக
என்னை யானறியாதவனாய்
என்னையே கேட்டேன்

"நானாக நானில்லை என்றால்
வீடாக ஏன் தம்பட்டம்?
"*நான்*" என்ற தன் பட்டம்?


"கவியன்பன்" கலாம்
அதிராம்பட்டினம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக