செவ்வாய், 28 ஜனவரி, 2020

தலைப்பு: *வெறுப்பு*

தெளிவாகச் சிந்தித்து நிம்மதியாய் முடிவுகளைத்
             தெரிவு செய்வாய்
களிப்பான நேரத்தில் இறைவனது வழிபாட்டுக்
               கடமை செய்வாய் 
வெளிப்பார்வைப் பேச்சினிலே மயங்காது நண்பரிடம்
              விரக்தி கொள்வாய்  -
 குளிப்பாட்டும்  முடிவுடனே பழகுபவர் நரியினது
            குணமாய்க்  காண்பாய்
வாக்கெல்லாம் மீறிடுவர் சகவாச மில்லாது
             மறுப்பே சொல்வாய்
நாக்கெல்லாம் பொய்யென்னும் தேன்தடவிப் பேசுபவர்
         நட்பும் வேண்டாம்
 போக்கெல்லாம் கோள்பேசித் திரிவோரைக் கண்டதுமே
             புறமே ஓட்டு
நோக்கெல்லாம் சுயநலமா யுள்ளோரை *வெறுப்பாக*
        நோக்கித் தள்ளு



"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக