தலைப்பு: "அச்சம் தவிர் "
======================
துச்சம் கவலைதான் தூரம் களைகவுன் துன்பியல்கள்
அச்சம் தவிர்த்தல் அவசியம் வேண்டுமாம் ஆளுமைக்கு
மெச்சும் புகழ்தனை மேதினி தந்திட வெல்லுதலே
நேரம் சகுனம் நினைத்துப் பணிகளில் நேசமின்றி
பாரம் எனநீ பலன்களின் தன்மையைப் பாழ்படுத்தி
வீரம் குறைந்ததால் வீணாய்த் திறன்களும் வீழ்வதுகாண்
தூரப் பயணம் தொடர்க மனத்தின் துணிவுடனே
அஞ்சு மிதயம் அடிமையாய் மாறிடும் ஆண்மையின்றிக்
கெஞ்சிக் குலாவும் கெடுதல் பழக்கமாய்க் கெட்டழியும்
நெஞ்சு நிமிர்த்தி நெடிதுயர்ப் பார்வையால் நேர்மையுடன்
துஞ்சா வுழைப்பால் தொடர்வது வெற்றிகள் தொய்வின்றியே
பேயும் பிசாசும் பெரிதும் பயம்தரும் பேதைமைகள்
நீயு மிதற்குள் நிலைத்தால் உளத்திடம் நிற்பதில்லை
வையம் உனைதினம் வைதலின் முன்புநீ வீறுகொள்க
மாயம் இதுவாம் மனத்தில் புகுந்துனை மாற்றிடுமே
போட்டிக் களத்தில் பொலிவு தருவது பொங்குமிந்த
ஊட்டம் நிறையும் உளவியல் சக்தியின் உண்மையிது
காட்டும் பயமிலாக் காட்சியில் வெற்றியைக் கண்டுணர்க
தீட்டு மிலக்கிற் றெளிவாய்க் கிலியிலாச் செய்கையிலே
ஆகும் நலத்துடன் அச்சம் தவிர்த்தவுன் ஆற்றலினால்
சோகம் விலக்கியுன் தோல்வியை வாழ்க்கையில் தோற்கடிக்க
ஏகும் பயணம் இனிதாய் அமைவது இவ்வுணர்வால்
சாகும் வரைக்கும் தளராத் துணிவுதான் சாதனையே
"கவியன்பன்" கலாம்,
0 கருத்துகள் :
கருத்துரையிடுக