வியாழன், 30 ஜனவரி, 2020






காம முள்ள காணியோ மகளிர் 
நாமம் கெட்டு நாட்டோர் திட்ட 
பேதை யிங்குப் பேதைமை யடைந்து 
பாதை மாறியே பயண மேகி 
நீதி கேட்டு நிற்பதால் பயனென் 
சாதிச் சங்கமும் சகலமும் துணையாம் 
வேதனை விலகா(து) வேண்டும் வாக்குச் 
சாதனை யிதுவோ சான்றோர் கேள்வி 
தானாய் வந்து தாவிதான் வலையில் 
மீனாய் சிக்கி மீன்விழி மடந்தையும் 
அரிவையும் எழில்மிகுத் தெரிவையும் மகளிரும் 
புரித லின்றியே புரிந்தது சரியா 
நாண மில்லா நாவினால் மகனைப் 
பேணும் தாயைப் பேயென விளிப்போம் 
விண்ணை எட்டும் விந்தைகள் புரிய 
எண்ணம் சீர்பெற எதுவும் செய்யாப் 
பெற்றோர் ஆணையும் பெரிதாய் என்ன 
கற்கச் சொன்னீர் காண்கிலேன் இனியும் 
அற்புதப் படைப்பெனும் அழகுப் பெண்ணின் 
கற்பெனும் புனிதம் காப்பது கடமை 
உன்னரும் கணவரும் உனக்கென வருவார் 
தன்னரும் உடலினைத் தழுவிட அவரிடம் 
உரிமையைக் கொடுத்திட உவப்புடன் திருமணம் 
புரிதல் மட்டும் புண்ணியம் தருவதாம் 
நெறியினைப் பிறழ்ந்து நீசெயும் தவற்றினால் 
அறிவினை இழந்ததாய் அறிகப் பெண்ணே 
கண்ணியம் மனத்தில் காத்து நின்று 
மண்ணிலே சிறந்த மாண்பினைப் பெறுக 
பெண்ணை மட்டும் பெற்றது கடனா 
கண்ணைப் போலக் காப்பதும் கடனே! 



"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக