ஞாயிறு, 19 ஜனவரி, 2020



வதைத்திடும் புற்றுநோய்; வளர்த்திடும் காசநோய்;
விதைத்திடும் மனவழுத்தம்; வீணாகக் காசும்போய்
நகைத்திடும் ஆண்மை நரம்புத் தளர்ச்சி;
புகைத்தலின் கெடுதிகள் புரிந்தால் மகிழ்ச்சி
உடலிலும் உன்றன் உடையிலும் துர்நாற்றம்;
குடலில் புண்வரும்; குரலில் தடுமாற்றம்;
சுற்றி உள்ளோர் சுகத்தில் கேடு;
மற்றவர்க்கு நோய்தருதல் மாபெரும் சாபம்
உன்னை வளர்த்திடும் உயர்ந்தச் சமூகத்தை
உன்னால் தரப்படும் ஒழுக்கமிலாத் துரோகம்
என்ன தண்டனை என்ற போதே
உன்னை நீயே உருக்குலைத்தல் போதுமே.
இதழ்முத்தம் உன்னுடல் இனிமேல் எட்டா
முதலிரவில் மனைவியின்
 முகமும் கிட்டா
இதைவிடத் தண்டனை இமலுமா நெஞ்சே
விதைவிட முன்னே விரட்டு நஞ்சை
தோலில் சுருக்கம்; தோல்விகள் தொடர
பாலில் நஞ்சுபோல் பார்வை
அறியாக் கலப்படம் அறிவா யாநீ


"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக