வியாழன், 2 ஜூலை, 2015

19/12/13 வியாழன் கவிதை நேரம்: பாமுகம்: கவிதைத் தலைப்பு:

“சுழற்சி”


குருதியின் சுழற்சி ஆக்ஸிஜன் கூட்டம் 
..............குதித்திடும் இதயமும் ஓட்டம்
கருவினில் சுழற்சிக் குழந்தையாய் ஆக்கம் 
................கருதிடும் தாய்மையின் நோக்கம்
மருவிலா மதியின் சுழற்சியால் தேயும் 
.........வளர்ச்சியும் பிறையெனக் காயும்
உருவிலே வளர்ச்சி; சுழற்சியின் மாற்றம் 
......உணர்த்திடும் முதுமையின் தோற்றம்


காற்றினால் சுழற்சிக் காட்டிடும் காட்சிக் 
..............கடும்புயற் கோலமாய்ச் சாட்சி
ஆற்றினில் சுழற்சி நீரினில் வேகம் 
......ஆர்த்திடும் பொழுதினில் சோகம்
நேற்றுள நிலைமை இன்றுதான் உண்டா 
...............நேரிடும் சுழற்சியைக் கண்டால்
மாற்றிடும் காலச் சுழற்சியால் வாழ்க்கை 
................மானிடன் நடந்திடும் போக்கே!


கதிரவன் சுழற்சி மாற்றிடும் நேரம் 
.......காலமும் பொழுதெனக் கூறும்
புதியதில் சுழற்சிச் செய்திடும் வேலை 
.............புகுத்திடும் புதுமையை நாளை
மதியினிற் சிந்தைச் சுழற்சியால் மாண்பாய் 
.............மனிதனின் இலக்கினைக் காண்பாய்
நிதியுறும் சுழற்சி உலகினில் காசு 
..........நிகழ்த்திடும் வினையினை யோசி!



பாடலாசிரியர்: அதிரை கவியன்பன் கலாம்,(அபுதபி)
பாடியவர்: அதிரை பாடகர் :ஜஃபருல்லாஹ்(ஜித்தாஹ்)

0 கருத்துகள் :

கருத்துரையிடுக