வியாழன், 2 ஜூலை, 2015

 ஹிஜ்ரி புத்தாண்டின் சிந்தனைகள்:





தவ்ர் குகையின் தவம்
சிலந்திக் கூட்டின் சீர்மிகு தியாகம்
சித்திக் என்னும் சிறந்த நண்பரின் சித்தம்
புறாக் கூட்டின் புண்ணியம்
நண்பரின் பாதத்தைப் பதம் பார்த்த 
பாம்புக்குக் கிடைத்த தரிசனம்
கவிதை பாடி வரவேறகக் கற்றுக் கொடுத்த 
யத்ரிப் மக்களின் யாப்பு!
எத்தனை நிகழ்வுகள் எம்பெருமானார்(ஸல்)
அவர்களின் வாழ்க்கையில் இருந்திருந்தாலும் 
இதனை மட்டும் ஹிஜ்ரியாண்டைக் கணக்கிலெடுத்த 
உமர்(ரலி) அவர்களின் ஒப்பற்ற அறிவாற்றல்!
இஃது ஒரு பயணம் தான்; ஆயினும் நமக்கெல்லாம்
ஆயிரமாயிரம் பாடங்கள் சொல்லும் பாயிரம்!


“கவியன்பன்” கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக