வெள்ளி, 3 ஜூலை, 2015

இறைவாழ்த்து:

அலகிலா அருளும் அளவிலா அன்பும்
இலகுமோர் இறையின் இனியபேர் போற்றி!

தலைவர்கள் வாழ்த்து:

தங்கமென நற்குணத்தில் காயித்(ஏ) மில்லத்
.....தமிழுக்கு முன்னுரிமைச் சொன்னார் ஆங்கு
சிங்கமெனக் கர்ஜித்த சிராஜூல் மில்லத்
,,,,,,சிந்தனையைக் கவர்ந்திட்டத் தமிழின் பாங்கு
மங்காத புகழுடைய தலைவர் அஹ்மத்
......மனங்கவர்ந்த எம்தலைவர் முனீருல் மில்லத்
எங்களூரின் பக்கத்தில் தாஜூல் மில்லத்
.....இப்பொழுதுச் சமூகத்தில் பெருமந் தஸ்து!


சபையோர் வாழ்த்து:

கண்ணியத் திற்குரிய காயிதே மில்லத்தும்
எண்ணிய நல்வழியில் இங்குப் _ புண்ணியம்
தங்கத்தான் வந்தச் சபையோர் களாகியத்
தங்கட்குக் கூறும் சலாம்


”அஸ்ஸலாமு அலைக்கும்”


மானம் போவதை, நினைத்துநீ ஆர்த்து

..........மாண்புறுத் தாய்சபைக் கொடியினைக் காத்து

ஈனப் பிறவியா யிலையெனக் காட்டு

.........இந்திய முஸ்லிமின் இதயமாய் மாற்று

தானொரு பக்கமும் துயர்ந்திடா வண்ணம்

..........தாய்ச்சபை உறுப்பின ராவதே எண்ணம்

ஏனினும் நித்திரை இதையெலாம் காண
.........இளம்பிறைக் கூட்டமே எழுந்துநீ வாவா!



தனித்தனிக் கூட்டமாய்ச் சரிந்தது தோழா!
.........தாய்ச்சபை மட்டுமே நிலைக்கணும் பாராய்
நுனிப்பு(ல்)லை மேய்ந்திடும் நூதனக் கூட்டம்
........நெடியதோர் பயணமே தாய்ச்சபைக் காட்டும்
பனித்துளிப் போலவே தீர்ந்திடும் பாரு
..........பாராளு மன்றத்தில் ஏணியில் ஏறு
இனித்துயர் போக்கிட வந்திடு முன்னே
.........இளம்பிறைக் கூட்டமே எழுந்துநீ வாவா!

அமைப்பினில் இணைந்துநீ பலப்பல உதவி
...........அழகுறச் செய்தலும், இறைதரும் பதவி
அமைவுள மாணவர் பேரவை வெல்ல
..........அக்டோபர் திங்களில் துணிவுடன் செல்லு
சமயமும் சட்டமும் நமக்குளச் சொத்து
.........சாதகம் செய்தனர் முன்னவர் பார்த்து
இமைவிழிப் போலவே இருந்திடல் வேண்டும்
..........இளம்பிறைக் கூட்டமே எழுந்துநீ வாவா!


புதுப்புதுக் கொள்கைகள் புறப்பட லாச்சு
........புனிதமாய் நினைத்ததை மறந்திட லாச்சு
சிதைத்திடும் முனைப்புகள் செழித்திட லாச்சு
........சிறுகுழுப் பெயரினில் வளர்ந்திட லாச்சு
பதைத்திடும் வசைபல அரசியல் மேடைப்
...........பண்பெனப் புதுவர வாகிட லாச்சு
இதைத்தினம் காணவோ, இனித்துயில் நீங்கி
........இளம்பிறைக் கூட்டமே எழுந்தநீ வாவா!

”கவியன்பன்” கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக