வியாழன், 2 ஜூலை, 2015

இளம்பிறை பேரணி பாடல் 2

அச்சமே நீக்கித் துணிவுடன் செல்லு
......அழகிய பாதையில் நில்லு
உச்சமாய் நிமிர்ந்துச் சிகரமும் எட்டு
......உணர்வுடன் பிறைக்கொடி கட்டு
மெச்சியே வாழ்வில் ஏற்றிடும் வண்ணம்
...மேன்மையாய் ஏணியின் சின்னம்
பச்சிளம் படையைப் பகைப்பவர் எவரும்
.....படிப்பினை பெற்றிட வைப்பாய்!

ஏளனம் பேசும் எதிரிகள் முன்னே
.........ஏற்றமும் அடைந்திடு இன்றே
வாளெனச் சொல்லின் போரினால் கூறும்
.......வார்த்தையில் நளினமே சேரு
நாளினைத் தள்ளிப் போடுதல் வேணடாம்
......நமக்கெனத் தாய்ச்சபை உண்டாம்
தோளினைத் திண்மைத் தொடர்ந்திட வேண்டும்
....தோழமை மதித்திட வேண்டும்!

கடித்திடும் பேச்சால் பகைமையைக் கொண்டு
...கட்சியில் பிளவுகள் கண்டு
கெடுத்திடச் செய்யும் இச்சையைத் தூரக்
.....கிடத்திடு; அழித்திடு வேராய்
அடுத்தவர் நலனில் அனுதினம் காட்டும்
.....அக்கறை அன்பினை ஊட்டும்
எடுத்தவுன் உறுதி மொழியினைக் காக்கும்
.....இலட்சியப் பயணம் நோக்கு!

மலைத்திட வைக்கும் இளம்பிறைக் கூட்டம்
.....வலுத்திடும் தலைவரின் நாட்டம்
புலப்படும் வெற்றிக் களிப்பினைத் தேக்கி
.....புறப்படு திருச்சியை நோக்கி
வலுத்தவுன் நேர்மைப் பார்வையில் அஞ்சி
......மாய்ந்திடும் எதிரியும் கெஞ்சி
நிலைத்தவன் துணையால் பேரணி கூடு
........நீஇறைப் புகழைப் பாடு !

நாக்கினில் வாய்மை உடையினில் தூய்மை
......நபிகளார் வழியினில் பசுமைப்
போக்கினைக் கொண்டு படைபல வென்று
,,,,,,போர்க்களம் போலவேச் சென்று
வாக்குகள் அள்ளு வாதமும் வெல்லு
.....வாழ்த்திடும் தலைவரின் உள்ளம்
ஏக்கமாய் மக்கள் நித்தமும் உன்னை
...ஏற்றிட வழியிது உண்மை!

யாத்தோன்: கவியன்பன் கலாம்
பிறப்பிடம்: அதிராம்பட்டினம்.
இருப்பிடம்: அபுதபி
அலைபேசி: 00971508351499
மின்மடல்: kalaamkathir7@gmail.com

இளம்பிறை பேரணிக்கான இரண்டாவது பாடல் யூ டூப் வீடியோ

http://www.youtube.com/watch?v=rnLpvhjl7_s&feature=youtu.be





0 கருத்துகள் :

கருத்துரையிடுக