சனி, 8 ஆகஸ்ட், 2015

முடியுமென்ற நம்பிக்கை
முதற்கண் இதன் படி
கடினபாறையைக்
கடந்தது இந்தச் செடி


வீரியத்துடன் எழும்பும்
விதையே ஆலமரம்;
காரியத்தில் தன்னம்பிக்கை 
கற்று தரும் போதிமரம்...!


மானமிகு மனிதனுக்குள்
மண்டியுள்ள நம்பிக்கை;
ஆனதினால் சோம்பலற்ற
ஆற்றலிற்றான் வாழ்க்கை...!!!!!

எப்படிப் புரண்டாய்? 
எப்படித் தவழ்ந்தாய்?
எப்படி நின்றாய்? 
எப்படி நடந்தாய்?
அப்படிமுயல்வாய் 
ஆயுள் முழுவதுமாய்

உந்துசக்தி நிரம்பியுள்ள
உனக்குள் திறமைதான்;
நொந்துநீயே கழிப்பதால்
நோயுடனே வறுமைதான்!!!!!


ஒவ்வொரு நொடியும் 
உழைப்பால் நிரப்பு;
அவ்வளவும் கிட்டும்
அகிலப் பரப்பு

காலம் வருமென்று 
காத்திருக்குமா விடியல்?
ஞாலத்தில் செடிபோலத்தான்
நாளுமுயன்றால் முடியும்!



“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பாடசாலை)அபுதபி(தொழிற்சாலை


0 கருத்துகள் :

கருத்துரையிடுக