மெல்லிய புன்னகை
மேனியைக் கிள்ளுதே
சொல்லிலா வார்த்தையில்
சோபனம் சொல்லுதே!
தோகை இளமயிலே
தீண்டிய கரங்களால்
தீயெனக் கருக்குமே
வேண்டிய வரங்களும்
வேகமாய் நெருங்குமே!
நாக்கில் தடுமாற்றம்
நாணமாய் ஒருமாற்றம்
போக்கில் வருமாற்றம்
போதையாய் உருமாற்றம்
தூக்கமும் வரவில்லை
தூதுபோல் வந்தவினை
ஏக்கமும் ஒருதொல்லை
ஏன்தினம் இந்தவினை
வீசியதோ வலைகண்
வீழ்ந்ததோ இதயமீன்
பேசியதோ மவுனமொழி
பேதையாய்த் துடிப்பதேன்?
இஃதென்ன காமமா?
இல்லையொரு காதலா?
இஃதென்ன சாபமா?
இதயமேக மோதலா?
பெண்ணசைவின் மின்னலா?
பேரிடியாய்த் தாக்குதே
கண்ணசைவில் இன்னிசையா?
காதருகில் வேர்க்குதே!
தோற்றேன் (உன்) இளமையிலே
வாகை உனக்கெனவே
வாழ்த்தும் (என்)கவிதையுமே!
வண்ணத்தை விரும்பினாயா?
வசீகரம் விரும்பினாயா?
எண்ணத்தை விரும்பினாயா?
எழுதிடு விருப்பமுடன்!
ஆக்கம்:
“கவியன்பன்” கலாம்
“கவியன்பன்” கலாம்
0 கருத்துகள் :
கருத்துரையிடுக