இந்தக் கவிதை இனியதிசைகள் இதழில் வெளியாகியுள்ளது
http://data.axmag.com/.../U51443_F334208/FLASH/index.html இந்த இதழில் 36 ஆம் பக்கம் என் கவிதை வெளியாகியுள்ளது
காயிதேமில் லத்திஸ்மா யில்சா ஹிப்தான்
கண்ணியத்தின் காவலராய் என்றும் நின்றார்
ஆயிரமாம் அரசியலார் யார்தான் தூய்மை
ஆருமுண்டோ இவரைப்போல் சொல்லில் வாய்மை
தாயிடம்தான் குழந்தைகளும் பாது காப்பு
தாய்ச்சபையில் சமுதாயம் என்றும் சேர்ப்பு
பாயிரங்கள் பாடியிவர் புகழை யாரும்
பாடிமுடிப் பவர்பாரில் உளரோ கூறும்?
சமுதாயச் சிந்தனைகள் மட்டு மன்றி
சந்தனம்போல் மணக்கின்ற தமிழைப் போற்றி
சந்தனம்போல் மணக்கின்ற தமிழைப் போற்றி
அமுதான நற்றமிழை நடுவண் ஆட்சி
அரங்கத்தில் உயர்வாகப் பேசும் மாட்சி
சமமான உரிமைகளை எமக்கு வேண்டி
சமதர்மம் மேலோங்க உரையில் தூண்டி
எமதாண்மை நாடறியச் செய்த வீரர்
எழுச்சியுடன் சமுதாயத் தொண்டில் தீரர்!
தொகுதியிலே வாக்குகளைக் கேட்க வில்லை
தொடர்ந்ததனைத் தக்கவைத்த புகழின் எல்லை
மிகுதியான வாக்குகளில் தொடர்ந்து வெல்லும்
மேன்மையைத்தான் பாரெங்கும் புகழைச் சொல்லும்
பகுதியாக இயக்கங்கள் இருந்தும் இன்றே
பறைசாற்றும் கேரளத்தில் மகான் என்றே!
தகுதியான வேட்பாளர் இவர்தான் என்று
தவப்பேறு பெற்றுவிட்ட தொகுதி என்றும்!
சீனப்போர் தருணத்தில் தயக்கம் இன்றி
சிப்பாயாய்த் தனையனையே தியாகம் செய்ய
தானமாகத் தந்திடவும் துணிந்த சீலர்
தலைவரைப்போல் எவரின்று நாட்டில் உளர்?
வானம்போல் விரிந்தமனம் பெற்று வென்றார்
வாழ்நாளில் எளிமையுடன் பற்றி நின்றார்
மானம்போல் பெரிதினும் பெரிதாய் இஸ்லாம்
மார்க்கத்தைப் பேணிவந்த தூய முஸ்லிம்!
ஆக்கம்: கவியன்பன் கலாம்
0 கருத்துகள் :
கருத்துரையிடுக