சனி, 8 ஆகஸ்ட், 2015




உயிர்மூச்சு “பெண்டுலத்தின்”
ஊஞ்சலாட்டம்
காலச் சக்கர முட்களின் சுழற்சிக்
கடிகாரம்
#வாழ்க்கை#

உயிர் நீரை
உறிஞ்சி வளரும்
பயிர் தோட்டம் மரணப்
பயணத்தால் உயிரின் ஓட்டம்
#வாழ்க்கை#

பதிவு செய்யப்பட்ட விழியம்
பார்வையில் பட்டக் காட்சி
முடிவு செய்யப்பட்ட விதம்
முடிவில் காண்பதே நிஜம்
#வாழ்க்கை#

தாயின் வழியே வந்து
தரணி யெங்கும் பறந்து
நோயின் பிடியில் சிக்கி
நொந்து விலகும் உடலும்
#வாழ்க்கை#

பல்லுக்குள் அகப்பட்டப்
பக்குவமான நாக்காக
சொல்லுக்கும் செயலுக்கும்
சொந்தமுள்ள சோதனை
#வாழ்க்கை#

மாநிலம் புகழ்கூறும்
மாபெரும் மன்னராட்சி
ஓரசைவில் கெடுவந்தால்
ஒதுங்குவது மண்ணறையாச்சு!
#வாழ்க்கை#



கவியாக்கம்: அதிரை கவியன்பன் கலாம், அபுதபி

இஃது என் 265 ஆம் படைப்பாகும்.
Attachments 

0 கருத்துகள் :

கருத்துரையிடுக