திங்கள், 16 மார்ச், 2020

காதலில் *அழைப்பு* கண்களில் தொடக்கம்
மோதிடும் முகிலாய் முத்தமோர் *அழைப்பு*
வாசனை நுகர்ந்திட வருடும் தென்றல்
நாசியில் புகுந்தெமை நளினமாய் *அழைக்கும்*
காலையில் எழுந்திடக் கதிரவன் *அழைப்பு*
வேலைக்குச் சங்கொலி விளிப்பதோர் *அழைப்பு*
காலம் வந்ததும் கடவுளின் *அழைப்பு*
ஓலமிட் டழுதாலும் ஓய்ந்திடா *அழைப்பே*

*கவியன்பன் கலாம்*

0 கருத்துகள் :

கருத்துரையிடுக