புதன், 11 மார்ச், 2020

யாழிசை மிகைத்து யாவரின் உளமும்
வாழிய வெனவே வாழ்த்திக் கொஞ்சிட
மழலையின் உரையுமோர் மயக்கிடும் இசையென
உழலுமுன் கவலையை உதிர்த்திடும் கலையது
பறவை பாடும் பண்ணிசை எழிலிசை
உறவுகள் குலவையின் ஒலிதரும் இசையிலும்
உணர்வுகள் மிகுந்து ஊக்கமும் பிறந்திட
பிணக்குகள் களைந்திடும் பிறக்கும் பாசமே


"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக