திங்கள், 3 பிப்ரவரி, 2020

தலைப்பு: *பூமி*


நாளும் மெலியுதே நாட்டின் பசுமைகள்
கோளும் எரியும் கொழுந்து

கொளுத்தும் வெயிலின் கொடுமை எனலாம்
நினைத்துதான் பாருங்கள் நீர்


நீரும் வராது நிலத்தினில் ஈரமில்லை
வேரு  மழிகின்ற  வேதனை  ---- யாருமே
பாரும் நிலையில்லை பார்


பாரி லியற்கையும் பாழ்பட்டுப் போனதால்
மாரி மறுத்தல் மனத்தினில் வாட்டமே
யாரிடம் சொல்லுவோம் யாம்.




"கவியன்பன்" கலாம்
அதிராம்பட்டினம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக