ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

"அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?"சொன்னார் 
அடுத்துவரும் துன்பங்கள் என்னவென்று புரியும் 
அரசியலின் போராட்டக் களங்களிலும் நிற்கும் 
மிடுக்கான வீரமங்கைக் கூட்டங்கள் பாரீர் 
வில்லாகப் பாய்கின்ற சொற்களைக் கேளீர் 
ஒடுக்குமிந்தக் கோழைகளைப் பொருட்படுத்தா வீரம்
உயர்படிப்புத் தந்ததிங்குத் துணிவானத் தீரம் 

0 கருத்துகள் :

கருத்துரையிடுக