உயிர்நாடி எதுவென்றே உணராமல் ஓடுகின்றோம்
உயிர்போகும் நாள்வரைக்கும் உண்மையிதைப் புரியாமல்
தயிர்த்தாழி உடைந்துவிட்டால் தடிமத்து வீணாம்போல்
பயிர்க்கொடி வாடிவிட்டால் பழுதாகும் நிலத்தைப்போல்
வாழ்க்கைக்குத் தேவையான வாழ்வாதா ரங்களிலே
பாழ்பட்டுப் போகின்ற பலவேறு காரணிகள்
உண்டெனினும் வாழவைக்கும் உயிர்நாடி எதுவென்று
கண்டுணர மாட்டாமல் கழிக்கின்றோம் ஆயுளையும்
அதனால்
ஆன்ம வொளிதான் அழியா உயிர்நாடி
மேன்மை பெறுவதற்கு மேதினியில் வந்ததை
தானுணரா வாழ்க்கைத் தறிகெட்டுப் போகுமிங்கு
ஞானவொளி கண்டால் நலம்
"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :
கருத்துரையிடுக