வியாழன், 20 பிப்ரவரி, 2020

கருவறை உலகில் காத்திருந்த பின்னரே
இருலறை விடுத்தவன் இனியொரு வசிப்பிடம்
இருப்பதை உணரா (து) இந்தப் பூமியில்
வருகிறான் வளர்கிறான் வகையாய்ப் பாவம்
செய்கிறான் தொடர்து செய்கிறான் மறுமை
பொய்யென மறுக்கிறான் பொய்யை நம்பினான்
கருவறை உலகெனக் கருதிய சிசுவென
இருப்பதாய் நினைக்கும் இவ்வுல கவாழ்வும்
இருக்கு மென்பதும் இயலா தென்பதை
பெருக்கும் செல்வப் பேதைமை உணர்த்துதே


"கவியன்பன்" கலாம்


0 கருத்துகள் :

கருத்துரையிடுக