புதன், 23 செப்டம்பர், 2015

Iskandar Barak with Abu Ajmal and 61 others
பரிசு கவிதை போட்டியி்ல் பங்கெடுத்து அற்புதமான கவிதை வழங்கி 2 ம் பரிசிற்கு தேர்வான கவிதை இதோ ..
.........................................................
துள்ளி உலாவரும் சுந்தரக் கால்களில்
வெள்ளிக் கொலுசுதரும் மெய்சிலிர்க்கு மோசைதான்
அள்ளி யுனைநான் அணைக்க விளிக்குதே
கள்ள மிலாப்பிள்ளை காண்.
கொலுசுதரும் சப்தம் கொலுபோல் குழந்தை
குலுக்கிவரும் பாரென்று கூறும்- இலக்கியம்
சொல்லுகின்ற தேரொன்றுச் சோர்வின்றி யோசையுடன்
மெல்லவரு மென்று விளம்பு
...................................................................
தனக்கேயுரிய பாணியில் தாராள தமிழை தெவிட்டாமல் அள்ளி வழங்கியவர் .......நமது மரியாதைக்குரிய அண்ணன்
அதிராம்பட்டனம் ... கவிஞர் கலாம் சேக் அப்துல் காதர் அவர்கள் தான்
இவருக்கு நண்பர் மீசல் சேக் சார்பில் 500 ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறேன்பதை மகிழ்வோடு தெரிவித்து நமது வாழ்த்தையும் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.
கலாம் அண்ணே...நீங்கள் முறைப்படி என்னை தொடர்பு கொண்டு உங்கள் பரிசினை பெற்றுக்கொள்ளும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் பெரிய கவிஞர் ஏதோ இந்த சிறுவர்களின் பரிசு இது...மகிழ்ச்சியும் வாழ்த்தும் அண்ணே.

0 கருத்துகள் :

கருத்துரையிடுக