ஆசான்
எழுதுகோலாம்
ஏரைக் கரம்பிடித்து
உழுதிடுவாரே
உளமென்னும் காணியில்!
கரம்பிடித்துக்
கற்றுக் கொடுத்து
உரமிடுவார்
உயர்கல்விச் செடியில்!
பழுதுபட்டுப்
பாழடைந்த மனவயலில்
விழுதுகளாய்
விதைத்திடுவார் ஞானவி(த்)தை!
பசுமரத்தாணியாகப்
பதிய வைத்துப்
பசும்பாலகர்கட்குப்
பயிற்றுவிக்கும் தாய்மடி!
கரும்பலகையில்
வெள்ளைக் கட்டியால்
எழுதினாற்றானே
பழுதின்றிப் பாடம் கற்கலாம்!
ஏற்றி விட்டு
இருப்பார் ஏணியாக
மாற்றங்கள் கண்டு
மகிழ்வார் ஞானியாக!
-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி
0 கருத்துகள் :
கருத்துரையிடுக